Saturday, August 9, 2008
என் உணர்வுகள் தொடாத் தூரத்தில்
என் உணர்வுகள் தொடாத் தூரத்தில்
ஒளிந்துகொள்கிறாய் நீ…
இமைகளை மூடிக்கொண்டு
நிஜங்களுக்கு இருட்டடிப்பு செய்கிறாய்…
பகலில் புன்னகையையும்
இரவில் கண்ணீரையும்
என்னுள் விதைக்கிறாய்…
முகாரியை மட்டுமே நேசிக்கின்றன
உன் வீணை நரம்புகள்…
உன்னால் எப்படித்தான் முடிகிறதோ
சுகமாய் வருடும் தென்றலைக்கூட சபிக்க….
உன் கோபங்களின் பெறுபேறு
வெறுமை மட்டுமே…
எனக்காக கொஞ்சம் திறந்து வை
உன் இதயத்தை…
அந்த வெறுமையை வென்றிடும் வீரியம்
என் அன்பிற்கு உண்டு…
--
பிரம்மியா கிருபநாயகம்,
மட்டக்களப்பு
Labels:
பிரம்மியா கிருபநாயகம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
/*
பகலில் புன்னகையையும்
இரவில் கண்ணீரையும்
என்னுள் விதைக்கிறாய்…
/*
உணர்வுமிக்க வரிகள்...
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
நல்ல கவிதை தங்கள் எழுத்துக்களின் நிலை ஒரு படிக்கு வருகிறது தொடரும் எழுத்தக்களும் இவற்றை விஞ்சுவதாக அமையட்டும்
தோழமையுடன்
எஸ்.சத்யதேவன்
Post a Comment