Thursday, July 9, 2009

அப்பா





கர்ப்பப்பை ஏதும் அங்கில்லை
பால் சுரக்கும் உறுப்புகள் தானுமில்லை
தாலாட்டுகள் ஏதும் தெரியவில்லை
ஆனாலும் தெரிந்தவரை
அன்பென்றால் அப்பாதான்

தவழும் வயதில் இடறி விழுந்தால் தூக்கி விட்டதில்லை
ஓடி விளையாடும் போது, கூட இருந்ததில்லை
தக்க தருணத்தில் என்னை தரணியில் உயர்த்திவிட்டார்
அன்பென்றால் அப்பாதான்

படிப்பு, விளையாட்டு
துக்கம் சந்தோஷம்
அன்பு அதிகாரம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டேன்
அப்பா என்ற உறவின் மூலம் ஆண்களை நேசிக்க கற்றுக் கொண்டேன்

அப்பா எனும் ஒற்றை சொல்லில்
என் விடியல்கள் புலர்ந்து நிற்கிறது
அப்பா எனும் இந்த சொல்லில்
என் வாழ்க்கை வசந்தத்துக்குள்ளேயே உழல்கிறது - இருப்பினும்

தவமொன்று செய்திடுவேன்
காலமெல்லாம் கூடிவாழ
மாண்டு போயின் மீண்டும்
மாறிப் பிறந்திருக்க!

5 comments:

பூங்குழலி said...

அருமையான கவிதை .அநேகம் கொண்டாடப் படாத அப்பாவின் அன்பை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்

Unknown said...

நல்ல தந்தைக்கு நல்ல மகள்.

எஸ்.சத்யன் said...

//அன்பு அதிகாரம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டேன்
அப்பா என்ற உறவின் மூலம் ஆண்களை நேசிக்க கற்றுக் கொண்டேன்//
இந்த வரிகள் மறுதலை எனக்கு பிடித்திருக்கிறது

Unknown said...

அருமையான கவிதை

வி.புருஷோத்மன் said...

உங்கள் கவிதை மொழி நன்றாக உள்ளது.வாழ்த்துகள். கவிதையால் வளருங்கள்.