Saturday, July 5, 2008

(சுவாமி) தந்திரதேவா - தனிநபர் NGO -தன்னின விருப்பு (கல்லு வெட்டுதல்)


[நேர்மையீனங்கள், தனி ஆட்களை புனிதப்படுத்துவதின் பின்னாலுள்ள சமூக விரோத நோக்கங்கள், ஏமாற்று வேலைகள் போன்றவற்றை அம்பலப்படுத்துவதற்காகவும், வரலாறு நெடுகிலும் திரும்பத் திரும்ப உருவாகும் ஒரே மாதிரியான தனி நபர் சாமிகள், பகவான்கள், புனிதப்படுத்தல்களுக்கெதிரான எழுத்து எதிர்ப்பாகவுமே இக்கட்டுரை கள்ளில் பிரசுரமாகிறது. சமப்பாலுறவினை கொச்சைப்படுத்துவதோ சமப்பாலுறவுத்தேர்வாளர்களைத் இயற்கைக்கு மாறானவர்களாகத் தனிமைப்படுத்துவதோ கள்ளின் நோக்கமன்று. சமப்பாலுறவுத்தேர்வு இயற்கையானதென்பதோடு அத்தேர்வுக்கான அங்கீகாரம் போராடிப்பெறப்படவேண்டியது என்பதிலும் "கள்" நம்பிக்கை கொள்கிறது -கள்]

கடந்தமாதம் இறுதிவாரம் திருகோணமலையில் இரு இறப்புக்கள் நிகழ்ந்தது. ஒன்று தி/உவர்மலை விவேகானந்தாக்கல்லூரிக்கு புதிதாய் நியமிக்கப்பட்ட பிரதி அதிபர் சி. காளிராஜா அவர்களின் மரணம். மற்றது வெள்ளைக்கார சாமியார் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா மகராஜ் அவர்களின் மரணம்.

இரண்டுமே புனிதங்களில் சிறு அசைவை உண்டுபண்ணியது. எனக்கு இரண்டுமே பழைய நினைவுகளை நினைவு படுத்தியது. சில பதிவுகளை கட்டாயம் செய்யவேண்டும் என்று ஒரு உந்துதலைத்தந்தது. முன்னது எனது பாடசாலை சம்பந்தப்பட்டது மற்றது சிலகாலம் நான் நெருக்கமாக பழகிய புனிதர் என்று சொல்லப்படுபவர்பற்றியது. பாடசாலை பற்றி நிறைய எழுத இருக்கிறதால் அதை பிறகு எழுதுறன். இப்ப எங்கட மசிர்ராஜ் மன்னிக்க மகராஜ் பற்றிய எனது அனுபவத்தையும் எனக்குத் தெரிஞ்சதையும் எழுதுறன்.

இதுக்கு நான் சாட்சி. நம்பிக்கையில்லாதவர்கள் அவருடன் நான் எடுத்த போட்டோவப்பாருங்க.


செத்தவன பற்றியெல்லாம் கண்டமாதிரி எழுதக்கூடாது கதைக்கிறவர்களுக்கு ஒன்றைச் சொல்லவேணும் உங்கட ஹிட்லர், முசோலினி, நாதுராம் கோட்சே, அமெரிக்காவின் ஜனாதிபதிகள், ஜே.ஆர் ஜயவர்த்தன இவர்களைப்பற்றியும் இவர்கள் செய்த கொடுஞ்செயல்கள் பற்றியெல்லாம் கதைக்கக்கூடாது. ஏனெனில்; அவர்கள் செத்து கனகாலமாயிற்று அதுக்காண்டி அவாகளின் செயல்களை விமர்சிக்காம இருக்க முடியாது.அப்படி விட்டா எல்லா மசிரும் உயிர் இருக்கும்வரைக்கும் எல்லாத்தையும் செய்திட்டு போவான். உங்களாள அதை செய்யமுடியலாம் என்னால அதை ஏற்கவே முடியாது.

எனது 10, 11வது வயதுகளில் வெள்ளைக்கார சுவாமி பற்றி எனது பள்ளித்தோழன் சொல்லி அறிந்தேன். அக்காலத்தில் எனக்கு சைவசமயம் மீது ஒரு தீவிரவிருப்பு இருந்தது. அனைத்து சமய போட்டிகளிலும் பங்குபற்றுதல் கோயிலுக்கு வேலைசெய்தல் தேவாரம் பாடுதல் என்றுதிரிந்தகாலம் அப்போதுதான் எனது பள்ளித்தோழன் வெள்ளக்கார சாமியார்ட்ட தான்போவதாகவும் என்னையும் வரச்சொல்லி அழைத்தான். அவர் நிறைய திண்பண்டங்கள் புத்தகங்கள் பரிசுப்பொருட்கள் தருவார் என்றும் சொன்னான். நான் அதற்கு ஆசைப்பட்டு போக சம்மதம் சொல்லி அண்டைக்கு பின்னேரமே போனேன். அவற்ற வீடு எங்கள் உவர்மலையில இருந்ததால் இன்னும் வசதியாகப் பொய்விட்டது. சமயம் என்று சொன்னவுடன் அம்மா உடனே சம்மதம் தந்திட்டா.


உயரமான மதில் கட்டின வீடு டபுள்கேட், பெரியவளவு. வீடு வீட்டுக்குப்பக்கத்தில கோயில் மாதிரி ஒரு மண்டபம் சாமிகளுக்கு சின்னசின்ன கட்டிடங்கள். பார்க்க ஆசையாகத்தான் இருந்தது. ‘சுவாமி’ கூப்பிட்டவுடன் வாசலில் நல்ல உயரமா சுருட்டைமுடியோடு வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையோடு ஒரு வெள்ளைக்காரர் கழுத்தில் உருத்திராட்சமாலை சகிதம் வாசலுக்கு வந்தார். நண்பன் உடனே நமஸ்காரம் சுவாமி என்று காலில் விழுந்து வணங்கினான் அவர் என்னைப்பார்க்க நானும் நமஸ்க்காரம் சொல்லி காலில் விழுந்து வணங்கினேன். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். உள்ளே அழைத்துச்சென்றவர் சாமிப்படத்தின் முன்னால் வணங்கச்செய்தார். “குருப்பிரம்மா குருவிஷ்ணு” சுலோகம் சொல்லித்தந்தார். நான் சில தேவாரங்கள் பாடிக்காட்டினேன் எனக்கு தெரிஞ்ச சமயக்கதையையும் சொன்னேன். அவருக்கு மிகுந்த சந்தோசம். எனக்கு குடிப்பதற்கு பால் தந்தார் அத்துடன் வேட்டி நஷனல் சேட் இரண்டு புத்தகங்கள் தந்தார். வெள்ளிக்கிழமை பஜனைக்கு வரச்சொன்னார். சம்மதம் அத்துடன் மீண்டும் அவர்காலில் விழுந்து வணங்கி வீட்டுக்குப்போனோம்.


நடந்ததை அம்மாவிடம் சொன்னேன் அவவுக்கு மிகுந்த சந்தோசம். அப்பாவுக்கு பிடிக்கவில்லை அவன் CIAயிட ஏஜென்ட் அவனிட்ட எல்லாம் போகதே என்றார். அம்மாட சம்மதம் இருந்ததால நான் போகத்தொடங்கினேன் வெள்ளிக்கிழமை வான் வந்து பஜனைக்கு ஏற்றிக்கொண்டு போகும் சுமார் 25 மேற்ப்பட்ட பொடியன்கள் வந்திருந்தார்கள் எல்லோரும் முன்பு சொன்ன கோயிலில் உட்கார்நது பஜனைக்கு ஆயுத்தமானோம் சாமியார் வந்தவுடன் பஜனை ஆரம்பமாகியது. ஒரு மணிநேரத்தில பஜனைமுடிந்தது. எல்லோருக்கும் பற்றீஸ் தந்தார்கள். பற்றீசுக்காகவே பலர் பஜனைக்கு வந்ததாக சொன்னார்கள்.

எனக்கு எல்லாம் பிடிச்சிருந்தது. முக்கியமாக அவர் வீட்டில் இருந்த சமய கதைப்புத்தகங்கள படிக்க மிகவும் ஆசைப்பட்டேன். அதற்காக அடுத்தநாளே அவரிடம் என் நண்பனையும் அழைத்துச் சென்றேன். முன்பு போல காலில் விழுந்து வணங்கி உள்ளே போனோம். அவரைச்சந்திக்கும் போதும் அவரைவிட்டுப்பிரியும் போதும் அவர்காலில் விழுந்து வணங்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். இல்லாவிட்டால் அவருக்க கோபம் வரும்.

நான் அவரிடம் சொல்லி புத்தகங்கள் அலுமாரியத் திறந்து புத்தகம் எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். வீட்டை கொண்டு வாசிக்கலாம் என்று சொன்னவர். என்அருகில் வந்து அமர்ந்து என்னுடைய குடும்ப விபரம் மற்றும் பிறவிபரங்களை கேட்டார். நண்பனை திண்பண்டங்களும் தன்னுடைய உணவுக்கு மரக்கறியும் வாங்கிவரும்படி பணம்கொடுத்து கடைக்கு அனுப்பினார். பின் உள்ளே சென்று சிறது நேரத்தின் பின் வந்து என் அருகில் அமர்ந்து என் கையைப்பிடித்து தன் மடியில் வைத்தக்கொண்டு கதைக்கத்தொடங்கினார். நானும் இயல்பாகவே கதைக்கத் தொடங்கினேன். பின் நண்பன் கொண்டுவந்த மரக்கறியை அவிச்சு வைத்துவிட்டு தின்பண்டங்களையும் சாப்பிட்டுவிட்டு சில புத்தகங்களுடன் வீட்டுக்குப்போனோம். இந்நாடக்ளில் நான் மிகுந்த வெறியுடன் கதைப்புத்தகங்களை அதுவும் படத்துடன் கூடிய கதைப்புங்களை மிகமிக வெறியுடன் வாசிச்ச காலம். அதனால அவர்வீட்டுக்கு அடிக்கடி போவேன் அவர் நடத்தும் பஜனைப்போட்டிகளிலும் சமயசம்பந்தமான போட்டிகளிலும் நான் நிறையப்பரிசில்கள் வாங்கினேன். தவிர கொம்பாஸ் குடை சேர்ட் விளையாட்டுசாமான்கள் என அவர்தரும் பரிசுப்பொருட்கள் என்று எல்லாம் தினமும் அவரிடம் போவதற்கும் அவருக்கு நம்பிக்கையான ஆளாக மாறுவதற்கும் வழிசெய்தது.


ஆரம்பத்தில் கையமைட்டும் பிடித்து கதைத்த அவர் பிறகு கட்டிப்பிடிக்க ஆரம்பித்தார். கன்னங்களில் முத்தமிடவும் (அதை கொஞ்சுதல் என்பது பேச்சு வழக்கு) ஆரம்பித்தார். தொடர்ந்து என் அந்தரங்க இடங்களை தடவுவுதும் மிக இறுக்கமாக கட்டிப்பிடிப்பது முத்தமிடுவது எனது கையை தனது மடியில் வைத்து அழுத்துவது என்று அவர் செயல்கள் நாளுக்குநாள் அதிகரித்தன.

அக்காலத்தில் வெளியில் இருந்த என் பெரிய நண்பர்கள் எல்லாம் அவரைத் தன்னினச்சேர்க்கையாளர் என்றுதான் சொல்வார்கள் அவர்கள் தமிழில் ‘கல்லு வெட்டுதல்’ என்று அதைக்கூறுவார்கள். நான் அவர்ட 'கல்' என்றுதான் எனக்கு பட்டப்பெயர். வயதுக்கு மீறிய நண்பர்கள் என்றதால் சில விசயங்கள் தெரியும் அதனால அவர்கள் சொன்னமாதிரி நடக்கவிடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன் ஆடைகளைந்துதான் அவர்கள் சொன்னது நடக்கும் என்றபடியால் அதைப்பற்றி கவனமாக இருந்தேன். வயதுக்கு மீறிய நண்பர்களின் தொடர்பால் நான் கொஞ்சம் விபரமானவனாகவே இருந்தேன். அப்படிப்பட்ட சம்பவங்கள் எனக்கு வரவில்லை.

அவருடைய பிரதான சிஷ்யனாக இருந்ததும் அவர்கட்டிய அவர் காசுவழங்கிய கோயில்களில், இல்லங்களில் நான் மேடைகளில் இருக்கவைக்கப்பட்டதும் அவருடைய பரிசுப்பொருட்களும் குறிப்பாக நான் கேட்கும் சமய புத்தகங்களை அவர்வாங்கித்தந்ததும் எனக்கு பெருமையாகவும் மிகவும் விருப்பமானதாகவும் இருந்தன. அவரின் இச்செயல்கள் பெரிதாக தெரியவில்லை. ஆயினும் அவரின் வாய்துர்நாற்றமும் சிலவேளை உடல்நாற்றமும் என்னை மிகவும் கஸ்ரப்படுத்தின. அவரின் எச்சில் பட்ட கன்னத்தில் தேமல் வந்தது எனக்குப்பிடிக்கவில்லை.


இவ்வாறு ஒன்றரை வருடங்கள் அவரின் 'சின்'னாக இருந்தேன். இறுதியாக எனது இருநண்பர்களுக்கு அவர் வாங்கிவைத்திருந்து உயர்ரக ஊதுபத்திகளை களவெடுக்க உதவிசெய்ததை அவர்கண்டுபிடித்து என்னை தலையில் மிகப்பலமாக குட்டி அடித்து தேங்காய்கள் நிறைந்த ஒரு இருட்டறையில் கொண்டுபோய் பூட்டி வைத்தார். நண்பர்க்ள அன்று வரவில்லை. அடுத்தநாள் நண்பர்களைக் கூட்டிக்கொண்டுவருமாறு சொன்னார் அதன்படி அவர்களைக் கூட்டிக்கொண்டு போனேன். நண்பர்களையும் அடித்து இருட்டறையில் பூட்ட முற்பட்டபோது அவரை அறைக்குள் தள்ளி விட்ட நாம் ஓடிவந்துவிட்டோம். அத்துடன் அவரின் தொடர்பு முறிந்து விட்டது.

இது எனது சொந்த அனுபவத்தின் சில பதிவுகள். தவிர அவர் பஜனைக்கு வராதவர்களின் வீட்டுக்குப்போய் வேட்டி மற்றும் தான் கொடுத்த பொருடக்ளைப்பறித்தவருவார். அவர்வீட்டுக்கு வருபவர்களை சமைக்கச் சொல்லுவார். சின்ன சின்னத் திருட்டு செய்பவர்களை அடித்தல் குட்டுதல் இருட்டறையில் பூட்டுதல் என கொடுமைப்படுத்தினார். இப்படிப்பட்ட ஒருவர் சாமியாய் இருக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை சந்தாப்பம்கிடைத்தால் வெளுக்கலாம் என்றிருந்தன் கிடைக்கவில்லை. அவர் ஒரு அதிகார வெறியர் தன்னிடம் வருபவர் எல்லோரும தன்காலில் விழவேண்டும் என்று எதிர்பார்ப்பார். எல்லாவற்றையும் விட சிறுவர்களுக்கு ஆசைகாட்டி தன்னிடம் வளைத்து வைத்திருந்தார்.

தவிர அவர் ஒரு தனிநபர் NGO வாகத்தான் தொழிற்பட்டார் வெளிநாடுகளில் இருந்து வரும காசைக்கொண்டு கோயில் கட்டிக்கொடுப்பார். அந்தக்கோயிலில்கள் அவர் இஷ்டப்படிதான நடக்கவேண்டும் என்றுபிடிவாதம் பிடிப்பார். அவர் கட்டிக்கொடுத்த கோயில்கள் எல்லாம் அவரைத்துரத்திவிட்டன. இதற்கான பணம் எல்லாவற்றையும் தானே வைத்திருந்து செலவழித்தார். சகலதும் தன்கட்டுபாட்டில் இருக்கவேண்டும் என்று விரும்பினார். முக்கியமான விடயம் அவர் ஒர் விளம்பரப் பிரியர் எல்லாப்பேப்பரும் எடுப்பார் அதில் அவர்பற்றிய செய்தியோ படமோ கண்டு பிடித்துக்கொடுப்பவர்களுக்கு பரிசுகொடுப்பார். அதற்காக நாம் போட்டிபோட்டு அவர்பற்றிய செய்தியை பேப்பர்களில் தேடுவோம். சிலபொடியன்கள் அதை அவர் வெளிநாட்டில் காட்டி காசுவாங்குவதாக சொன்னார்கள்.
பிற்காலத்தில் அவரின் தன்னினச்சேர்க்கைபற்றியும அவரின் அடாவடிபற்றியும் நிறைய அறிய கிடைத்தது.

ஆரம்பத்தில் சாம்பல்த்தீவு, பின்னர் உவர்மலை கடைசியாக செல்வநாயகபுரத்தில் வீடெடுத்து தங்கியிருந்தார். அவர் ஒரு புனிதர் ஒரு பம்மாத்துக்காரர். அவரை பெரியாளாக இங்கே யாரும் மதிப்பதில்லை அவரிடம் சென்ற பொடியன்கள் எல்லாம் ஓரளவு வயதுவர நின்று விடுவார்கள். அவரைப்பற்றி அறிஞ்சவன் அவரை மகராஜ் என்றோ சுவாமி என்றோ கூப்பிடமாட்டான் மசிர்ராஜ் என்றோ கல்மஸ்த்தான் என்றோ இல்லாட்டி வேறமாதிரியோதான் கூப்பிடுவான்.

இப்படிப்பட்ட ஒருத்தர எங்கட சில மசிருகள் பெரிசா சொல்லுதுகள். அவற்ற செத்தவீட்டு செலவு 200,000 ரூபா இதெல்லாம் தேவையா. கடவுளைச் சொல்லி நடக்கிறது கூத்துக்கள் எவ்வளவு இது தெரிஞ்சும் ஏன் இன்னும் சிலபேர் தனிநபர்கள கடவுளா நம்புறாங்க அதை எழுதுறாங்க அவாகள் என்னைப் பொறுத்தவைரயில் அவர்களுக்கு வேற பெயர்.


எழுத்து என்பது நேர்மையாக இருக்கவேண்டும் அநியாயத்தை எதிர்ப்பதாக இருக்க வேண்டும். அதுவிட்டுவிட்டு மோசடிக்காரர்களை தூக்கிப்பிடிக்கிறதா இருக்கக்கூடாது.

தந்திரதேவா என்ற ஒருவரைப் பற்றி நான் கருத்தில் எடுப்பதையோ அதை பதிவு செய்வதையோ விரும்பவில்லை எதிர்காலத்திற்கு இப்படிப்பட்ட ஒருவர் இருந்தார் என்றதை சொல்லாமல் விடவே விரும்புகிறேன். ஆயினு சில மசிருகள் அவரை பெரிய பருப்பா காட்டி எழுதுவாதால் இதில் சில குறிப்புகளை எழுதினேன் அதையே வேலைமெனக்கேடு என்று எண்ணுகிறேன். இதைப்படிச்சிட்டும் கொஞ்சபர்பேர் என்னோட் சண்டைபோடலாம் ஆதாரங்கள் கேட்கலாம் அவங்களுக்கு சொல்வது இதுதான் தந்திராதேவாப்பற்றி நல்லது எழுதுவதுதான் கஸ்ரம் அவருடைய அசிங்கங்களை எழுதுவது இலகு ஆதாரங்களும் இலகுவாக்கிடைக்கும்.

எனக்கு தன்னினச்சேர்க்கை மற்றும் ஒழுங்கு மீறல்களில் எந்த காழ்ப்பும் கிடையாது. ஆனா அதை நேர்மையா செய்யவேண்டும். ஆனால் புனிதமானது என்று எல்லோரையும் பேக்காட்டி இப்படிச் சிலர் செய்யிறது. அவர் செத்தாப்பிறகு சில மசிர்கள் அவற்றை மசிர் எல்லாத்தையும மறைச்சிட்டு வக்காலத்து வாங்கிறது இவைமீது எனக்கு காழ்ப்பு உண்டு.

--
எஸ். சத்யதேவன்



தொடர்புடைய தொடுப்புக்கள்:

29 comments:

மு. மயூரன் said...

சத்தியதேவன்,

தந்திரதேவா உயிரோடு இருக்கும்போது இக்கட்டுரை வெளியாகியிருக்கவேண்டியது. இப்பொழுது அவர் இறந்துவிட்டது ஏமாற்றமே.

இருந்தும், அவர் உயிரோடு இருக்கும்போது நான் வாழ்ந்த சூழலில் பரவலாக அவரைப்பற்றி ந்ல்ல பெயரே இருக்கவில்லை.

பாடசாலையில், நண்பர் வட்டத்தில் தந்திரதேவா என்றாலே, ஒரு மோசடிக்காரன் என்ற பிம்பம்தான் இருந்தது.

ஊரில் சீ ஐ ஏ ஏஜன்ட் என்ற பெயர் இருந்தது.

எங்கள் வீட்டுக்கு முன்னால் இருந்த மாமாவிடம் செமையாக உதை வாங்கியவர் தந்திரதேவா.

அதனால் "அம்பலப்படுத்தல்" தேவையில்லாமற்தான் இருந்தது.

ஆனால் செத்தபிறகு இவரை புனிதப்படுத்தும் முயற்சிகள் ஆங்காங்கே நடைபெற ஆரம்பித்திருக்கிறது.

அந்த வகையில் இக்காலப்பகுதியில் இவ்வாறு அம்பலப்படுத்தல் தேவையானதாகவும், காலப்பொருத்தம் உடையதாகவுமே படுகிறது.

நீங்கள் இங்கே பகிர்ந்துகொண்ட இதே அனுபவங்கள் என்னுடைய நண்பர்கள் சிலருக்கும் ஏற்பட்டிருந்தது.

Anonymous said...

ந்னறி மயூரன் ஆனால் இதை எழுதியதற்கு எதிராக அனாமேதய துண்டுப்பிரசுரம் ஒன்று வெளயிடப்படடதாக நண்பர்கள் சொன்னார்கள் நான்ன இன்னும் பார்க்கவில்லை கிடைத்தால் அறியத்தருகிறேன் புனிதம் என்று சாக்கடைகை; குத்தினால் ஏற்படும் மணம் அதிகம்தான்

Anonymous said...

தந்திரதேவாவின் மீது இருக்கும் 'சமூக அபிப்பிராயத்தை' எதிர்கொள்ள நீங்கள் அவருடைய பாலியல் தெரிவுகளை முதன்மைப்படுத்தியிருப்பது கவலை தருகிறது. அதுவும் 'கல்லு வெட்டுதல்' என்கிற அவமானப்படுத்தும் hate-speech என்கிற வகைப்பாட்டுக்குள் வருகிற ஸ்லாங் பாவித்து இருக்கிறீர்கள். சமப்பாலுறவு பற்றி முதலில் நீங்கள் சொல்லுகிற ஆதரவான prelude ஒட்ட மறுக்கிறது.
10-11 வயதில் இது நடந்தது என்பதை வைத்துப் பார்க்கையில் உங்களுடைய முக்கிய கரிசனையாக இருந்திருக்க வேண்டிய விடயம் அவருடைய pedophilic nature. ஆனால், அதைவிட 'சமப்பாலுறவாளர்' என்பது உங்களுக்கு உறுத்தியிருக்கிறது, எரிச்சலூட்டியிருக்கிறது. அதுதான் மோசமான, அவமானப்படுத்தும் குறிச்சொல்லை தலைப்பாக இட்டு தந்திரதேவாவின் பாலியல் தெரிவை முதன்மைப் படுத்தியிருக்கிறீர்கள். சிறுவர்களது நிலை உங்களுக்கு அவ்வளவாக கரிசனைக்குள்ளாகாது போயிருப்பதை என்னவென்று சொல்வது? அல்லது, இதை(homosexuality)விட அது(peadophilia) பரவாயில்லை என்று நினைப்பா? Pedophilic என்று சொல்வது இலகுவில் 'எடுபடுகிற' 'சமூகத்துக்கு உறைக்கிற' விசயமாக இருந்தும் அதில் கை வைக்காமல் சமப்பாலுறவை அழுத்த வேண்டியிருந்ததன் பின்னணி எனக்கு மிகவும் வியப்பளிக்கிறது.

Anonymous said...

தந்திரதேவா என்கிற ஒரு அபரிமிதமான 'கட்டுமானத்தை' எதிர்கொள்ள நீங்கள் pedophiliaவைத் தூக்குவதும் கூட எவ்வளவு சரி என்று தெரியவில்லை. தந்திரதேவா 'வெள்ளைக்கார' 'பாலியல் வெறிபிடித்த' என்பவற்றுள் எதிர்கொள்ளப்படுவது உங்களிடம் இருக்கிற புலனாய்வு வறுமையை சுட்டுகிறதோ என்னமோ! (இந்த இரண்டுமே எனக்கு xenophobic மற்றும் கலாசாரப் புனிதவாதக் குறை கூறல்கள் தானே?) நீங்களோ ஓரிடத்தில் குறிப்பிடுற மாதிரி அவர் CIAட கைக்கூலியாக எப்பிடி இயங்கினார், எப்பிடி மக்களை depoliticize (அரசியல் பிரக்ஞை நீக்கம்?) செய்தார், அவருடைய 'உதவி' களின் நுண்ணரசியல் எது (பாலுறவுடன் மட்டுப்படாது அதற்கு வெளியிலும்) என்பவற்றைக் கவனம் கொண்டிருக்க வேண்டும். (உதாரணமாக, 'ஜெகோவா' போன்ற உலகு தழுவிய மத அசைவியக்கங்களை விமர்சிப்பவர்கள் அதை ஒரு முழு அமைப்பாக எதிர்கொள்வார்களே தவிர, அதில் ஒரு போதகர் கல்லுப் பார்ட்டி, அதிகாரம் காட்டினார், இருட்டறையில் பூட்டினார் என்று இல்லை. சுருக்கமாகச் சொல்லப் போனால், it's not the individual, it's THE WHOLE SYSTEM that matters. அந்த சிஸ்டம் இப்படியான தனிமனிதர்களால் தான் ஆகியிருக்கிறது என்று நாம் காட்ட முடியும் தான். ஆனால், அது மிகவும் வீக் ஆன, உங்களுடைய சிஸ்டத்துக்கும் உலை வைக்கிற ஒரு உரையாடலாய்ப் போய் முடியும்.

Anonymous said...

தந்திரதேவாவின் இருப்பும் மறைவும் முக்கியப்படுத்தப் படுவதில் உங்களுக்கு சமப்பாலுறவாளர் என்பதைத் தவிர்த்து எழுகிற சிக்கல், அவர் ஒரு தனி நபர் 'NGO' நடாத்தினார், publicity தேடினார் எல்லா இடங்களிலும் தன்னுடைய 'அதிகாரத்தை' promote பண்ணினார், 'வெளிநாட்டு; பணம் என்கிற புள்ளிகளில். சரி, 'ஆன்மீகத்தை'க் கைவிட்ட இடதுசாரி NGOக்களும் இதைத்தானே செய்தார்கள்? எனக்கு எவ்வித வித்தியாசங்களும் தெரியுதே இல்லை. அவர்கள் சமூகமாற்றத்தை தூண்டிவிட்டது போல தந்திரதேவாவும் ஏதோ ஒருவித சமூக மாற்றத்தை உண்டு பண்ணத்தான் செய்தார். தந்திரதேவாவின் கைகளில் கறைகள் இருப்பது போலவே இடதுகளின் கைகளிலும் கறைகள் இருக்கவே இருக்கின்றன. ஆன்மீகம்/பக்தி போன்றவற்றை NGO எனக் கூறும் தகுதி மார்க்சிச/இடதுசாரி NGOக்களுக்கு இருக்கா என்று தெரியலை. இதே விமர்சனம் அவர்கள் மீதும் வைக்கப் படக் கூடிய ஒன்று தான். அவர்களும் NGO நடாத்தினார்கள், publicity தேடினார்கள், எல்லா இடங்களிலும் தம்முடைய மேலாண்மையை உறுதி செய்ய முனைந்தார்கள், அப்புறம் 'வெளிநாட்டு'(சீன/ரஷ்ய) உதவிகளைப் பெற்றார்கள்.... இவற்றையே தான் தந்திரதேவாவும் செய்திருக்கிறார். ஆக தந்திரதேவாவின் 'செயல்களை' *மட்டும்* விமர்சிப்பதன் மூலம் இடதுசாரிகளின் செயல்களையும் கண்டிக்க வேண்டியதொரு சங்கடமான நிலைக்கு ஆட்பட வேண்டி வரும்.
இதில் எனக்குத் தெரிந்து நீங்கள் செய்திருக்க வேண்டிய விடயம், தந்திரதேவாவின் நோக்கம்-அதற்காக அவர் 'செயல்'களை ஒருங்கிணைக்கிற விதம்; இவை இரண்டும் அவர் officialஆக சொல்கிற நோக்கங்களுடன் முரண்படுகிற புள்ளிகளை இனங்காட்டியிருக்கலாம்.

Anonymous said...

தந்திரதேவாவின் ஊடக செல்வாக்கு எதிர்கொள்ளப்படும் முறை இதுவாக இருக்க முடியாது... 'அவன் ஒரு கல்லுப் பார்ட்டிடா மச்சான்' என்கிற அளவிலான பகிர்ந்து கொள்ளல் மட்டுமாகவே இதை என்னால் பார்க்க முடிகிறது. வீரகேசரி, தினக்குரல், சுடர் ஒளி என்று ஊடகங்களில் இந்த சாமியார்கள் ஆக்கிரமிக்கிற பக்கங்களைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறேன். இந்த மாதிரியான பகிர்ந்துகொள்ளல் ஒன்றுக்கு இருக்கக் கூடிய முக்கியத்துவம் மிகவும் சிறிது நண்பர்களே... யாழ்ப்பாணத்தில் நல்லூர் சைவப் பெரியார்களால் நிர்வகிக்கப் படுகிற சிறுவர் மடத்தில் இப்படியான ஒரு விடயம் நடந்து அச் சிறுவனின் statement உடன் court ஏறியும் மத அமைப்பை அசைக்க முடியவேயில்லை. உதயன் பேப்பரின் பெட்டிச்செய்தியாக - பெயர் குறிப்பிடப் படாமல் வெளிவந்ததோடு சரி. ஆதாரங்கள், வாக்குமூலத்தோடு போன கேஸுக்கே இந்நிலை என்றால், இந்தப் பகிரலின் முக்கியத்துவம் என்னவென்பது கேள்வி. (உங்களுடைய பிரதான நோக்கம் 'கல்லுப் பார்ட்டி' 'NGO' என்கிறவற்றில் தொங்கியிருப்பதில்)

Anonymous said...

இங்கு 'சில மசிருகளுக்கு' தந்திரதேவா ஒரு 'பெரிய பருப்பாக' (your words) இருப்பதன் சமூக அவாவுதல்களை நாம் புறக்கணித்து விட முடியாது. தந்திரதேவா என்கிற 'பருப்புக்கு' ஏங்கிக் கிடக்கும் படியாக எமது மக்களை அவை எவையெல்லாம் தள்ளினவோ, அவரிடம் ஆறுதல் தேடுமளவுக்கு 'நிம்மதியற்றவர்களாக' 'அரசியல் விழிப்புணர்ச்சியற்றவர்களாக' எமது மக்களை இருக்கும் படி செய்hஅது யார்/எது? தந்திரதேவா வானத்தில் இருந்து குதிக்கவில்லை. இந்த சமூகத்தில் அவர் பொருந்திக் கொள்வதற்கான வெற்றிடம் இருந்தது. அது யாருடைய இடமென்று நினைக்கிறீர்கள், அது எங்களுடைய இடம் நண்பரே அது எங்களுடைய இடம்... எங்களுடைய சனங்களை நாங்கள் மிக மோசமாகக் கைவிட்டோம், எங்களது சனங்களை நாம் கடவுளர்களிடம் தள்ளி விட்டிருக்கிறோம், எமது தேவைகளுக்காக. 'மசிர்கள்' என்று ஒதுக்குவதை விடுத்து, எங்களுடைய உறவினர்களும் சனங்களும் இப்படியாய் அலைவதன் சமூகக் காரணங்களைக் கண்டடைய வேண்டும்.

Anonymous said...

தமிழ்ப் பத்திரிகைகளில் தான் இப்படியொரு கேவலம் நடக்கிறது, தங்கம்மா அப்பாக்குட்டி, ரவிசங்கர், சாயி பாபா, அம்மா பகவான், தந்திர தேவா என்று நீளமாக.. வீரகேசரியின் தலைப்புச் செய்தியாக ரவிசங்கருடைய statement. இப்போது பிறைப்பூக்கள் என்று தொடங்கி 'பெண்களே பர்தா அணியுங்கள்' என்று அது வேறு... எங்களுடைய மக்களுக்கு 'கடவுள்கள்' தேவைப் படுகிறார்கள் என்பதன் சமூகப் பின்புலங்கள் ஒருபுறமிருக்க, இந்த ஊடகங்கள் கடவுளை மென் மேலும் தேவைப்படுத்தும் காரியத்தை கனகச்சிதமாய் செய்கின்றன. வலைப்பதிவர்கள்/நண்பர்கள்/ஆர்வலர்கள் ஒன்றுசேர்ந்து ஊடகங்களுக்கு முறையீடு செய்யலாம், அழுத்தங்கள் தொடர்ந்து பிரயோகிக்கப் பட வேண்டும், Secularஆன ஒரு நிலைக்கு அவர்கள் வந்தாக வேண்டும்.

Anonymous said...

தந்திரதேவா உங்களை 'அப்படியாக' அணுகியபோது நீங்கள் 'கவனமாக' இருந்திருக்கிறீர்கள், avoid பண்ண முயல்கிறீர்கள். பாலியல் சார்ந்த Personal Narrativesஐ எப்படியாக கலாசாரம் வடிவமைக்கிறது, தணிக்கை செய்யுது என்பது ஓர் சுவாரஸ்யமான விசயம். பாலியல் வன்முறையாளரை வில்லனாக்கி காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் etc etc... இது உங்கள் விசயத்தில் நீங்கள் சொல்லுகிற படியாகவே நடந்திருக்கு என்று நம்புறன். :)
ஆனால், எல்லாத் தருணங்களிலும் இப்படியாக மட்டுமே இருப்பதில்லை என்பதற்காய் இதை வாசிப்புச் செய்யவும்: http://peddai.net/?p=121

மு. மயூரன் said...

//10-11 வயதில் இது நடந்தது என்பதை வைத்துப் பார்க்கையில் உங்களுடைய முக்கிய கரிசனையாக இருந்திருக்க வேண்டிய விடயம் அவருடைய pedophilic nature. ஆனால், அதைவிட 'சமப்பாலுறவாளர்' என்பது உங்களுக்கு உறுத்தியிருக்கிறது, எரிச்சலூட்டியிருக்கிறது.//

எனக்கும் இது ஆர்வமூட்டக்கூடிய விசயமாகவே இருக்கு.

ஒருவர் தன் சொந்த அனுபவங்களை எழுதும் போது, தனது 11 வயதில் இருந்த தான் பாலியல் ரீதியாக பலதும் அறிந்தவராகவே இருந்ததாக தன்னையறியாமே நம்புவது இதற்கு காரணமாயிருக்கலாம். சிறுவர் மீதான பாலியல் நாட்டம் எனும் தனிமனிதப் பாலியல் தெரிவு, "கல்லு வெட்டுவதை" விடவும் தீவிரமான சமூக அச்சுறுத்தலாகத்தான் சமூகத்தால் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

தந்திரதேவாவை சிறுவயதிலேயே எனக்கும் நெருக்கமாய்த்தெரியும் என்ற அளவில், எனக்கே கூட அவரை அந்தக்கோணத்தில் பார்க்கத்தோன்றவில்லை. ஏனென்றால் அப்போது நானும் சிறுவனே. :-)


//அதில் ஒரு போதகர் கல்லுப் பார்ட்டி, அதிகாரம் காட்டினார், இருட்டறையில் பூட்டினார் என்று இல்லை. சுருக்கமாகச் சொல்லப் போனால், it's not the individual, it's THE WHOLE SYSTEM that matters. அந்த சிஸ்டம் இப்படியான தனிமனிதர்களால் தான் ஆகியிருக்கிறது என்று நாம் காட்ட முடியும் தான்.//

சிஸ்டம் தொடர்பான உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்.

ஆனால் தனிமனித புனிதப்படுத்தல்களையும் எதிர்கொள்ளவேண்டித்தான் இருக்கிறதென்ன?

தந்திரதேவா போதித்தவை, மற்றவர்களை நம்பப்பண்ணியவைக்கு மாறாக அவர் நாந்துகொண்டார் என்று எடுத்துக்க்காட்டுகிறது என்ற அளவில் சில விசயங்களை ஏற்றுக்கொள்ள முடியும்.

ஆனால் எதை அழுத்துவது என்ற அளவில் எனக்கும் இக்கட்டுரையோடு மாறுபட்ட கருத்துக்களே உண்டு


//ஆக தந்திரதேவாவின் 'செயல்களை' *மட்டும்* விமர்சிப்பதன் மூலம் இடதுசாரிகளின் செயல்களையும் கண்டிக்க வேண்டியதொரு சங்கடமான நிலைக்கு ஆட்பட வேண்டி வரும்.//

இங்கே இடதுசாரிகள் எங்கே வந்தார்கள்? மற்றவர்கள் எல்லாம் எங்கே போய்விட்டார்கள்? கட்டுரையாளர் ஏன் இடதுசாரிகளை விமர்சிக்கச் சங்கடப்படவேண்டி வரும்? கட்டுரையை நான் ஒழுங்காய் வாசிக்கவில்லையோ என்னமோ, கட்டுரையாளர் தன்னை இடதுசாரி அனுதாபி என்று என்று எங்கும் குறிப்பிட்டதாய் தெரியவில்லை.


//'அவன் ஒரு கல்லுப் பார்ட்டிடா மச்சான்' என்கிற அளவிலான பகிர்ந்து கொள்ளல் மட்டுமாகவே இதை என்னால் பார்க்க முடிகிறது//

உண்மைதான். ஆனால் இவ்வாறான "அடிமட்டக்" கூற்றுக்களிலிருந்தே எதிர்ப்பு மனநிலைகள் தோற்றம் பெறுகிறது என்ற உண்மையை மறுத்துவிட முடியாது.

எல்லா மட்டங்களிலும், கற்பிக்கப்பட்ட ஏதாவதொன்றின் மேல் நின்றுகொண்டே நாம் சமூக விமர்சனங்கள் செகிறோம். அடிமட்டங்களில், கற்பிக்கப்பட்ட விடயங்கள் இவ்வாறானதாக இருக்க, அவள்/அவன் ஒரு சிறுவர் துஷ்பிரயோகி, அவள் / அவன் ஒரு வரட்டு இடதுசாரி, அவள்/அவன் ஒரு தீவிர வலதுசாரி என்று சொல்லும் நம்பிக்கைக்கும் அவன் ஒரு "கல்லன்" என்று வசையும் நம்பிக்கைக்கும் பெரிய வித்தியாசங்கள் இருப்பதாகப்படவில்லை.

ஆனால் எனது நம்பிக்கைகளின்படி, இந்தப்பார்வை போதுமானதல்லத்தான். மக்களை அரசியல் நீக்கம் செய்வது என்ற கோணத்திலிருந்தே என்னால் இந்தப்பிரச்சினையை அணுக முடியும்.


//எமது தேவைகளுக்காக. 'மசிர்கள்' என்று ஒதுக்குவதை விடுத்து, எங்களுடைய உறவினர்களும் சனங்களும் இப்படியாய் அலைவதன் சமூகக் காரணங்களைக் கண்டடைய வேண்டும்.//


மிகச்சரியான கருத்து. எங்களுக்கு தெரிந்ததை தெரிந்துகொள்ளாத மனிதர்களை நகையாடுவதையும் வசைபாடுவதையும் விடுத்து, புரிந்துகொள்ளலும், புரியச்செய்தலும் செயற்படுதலுமே ஆரோக்கியமானது என்ற பார்வையே இந்தக்காலத்துக்குரியது. வளர்ச்சியடைந்த பார்வையாக அமைவது.

மாறாக //எப்பிடி மக்களை depoliticize (அரசியல் பிரக்ஞை நீக்கம்?) செய்தார், அவருடைய 'உதவி' களின் நுண்ணரசியல் எது (பாலுறவுடன் மட்டுப்படாது அதற்கு வெளியிலும்) என்பவற்றைக் கவனம் கொண்டிருக்க வேண்டும்.//

என்றவாறான "வேண்டும்களை" ஒரு கட்டுரையின் மீது சுமத்தி, நாங்கள் எதிர்பார்ப்பதுபோலத்தான் நீ எழுதியிருக்க வேண்டும் என்பதுபோல உறுமுவது பழைய கால விமர்சன முறை, வளர்ச்சியடையாதது.



சத்தியதேவன் உரையாட வருவாராக இருந்தால் நன்றாக இருக்கும்.

மு. மயூரன் said...

//உங்கள் விசயத்தில் நீங்கள் சொல்லுகிற படியாகவே நடந்திருக்கு என்று நம்புறன். :)//

ஆண்பிள்ளைகள் கூட தங்கள் கற்பை எழுத்துக்களில் நிரூபிக்க வேண்டியிருக்கிறது பாருங்களேன்... ;-)

Anonymous said...

//ஒருவர் தன் சொந்த அனுபவங்களை எழுதும் போது, தனது 11 வயதில் இருந்த தான் பாலியல் ரீதியாக பலதும் அறிந்தவராகவே இருந்ததாக தன்னையறியாமே நம்புவது இதற்கு காரணமாயிருக்கலாம். // hmm, :) interesting!!
//ஆண்பிள்ளைகள் கூட தங்கள் கற்பை எழுத்துக்களில் நிரூபிக்க வேண்டியிருக்கிறது // he he :D

Anonymous said...

//இடது சாரிகள் எங்கு வந்தார்கள்?// அது ஒரு உதாரணத்துக்காக, ஆன்மீக வியாபாரம் போலவே, ஆன்மீகம் கடந்த மற்றைய நிறுவனங்களும் (இருப்பவற்றுள் sanerஆன இடது நிறுவனம் கூட) இப்படியாக விமர்சிக்கப் படக் கூடிய ஒன்றே என்று காட்டுவதற்காக சொன்னது.
கட்டுரையாளரையும் இடதுசாரிகளையும் ஒருசேர நான் பார்க்கவில்லை மயூரன். அப்படியான ஒரு வாசிப்புக்கு நான் இடமளித்திருந்தால் என்னுடைய மொழிதலில் உள்ள தவறுக்கு வருந்துகிறேன்.
[அப்படியே நான் கட்டுரையாளரை 'இடது' என அடையாளம் கண்டேன் என்று வைத்துக் கொண்டாலும் தவறு இல்லை. NGO எதிர்ப்பு, ஆன்மீக மறுப்பு என்பவற்றை எவற்றுடன் associate பண்ணும்படிக்கு நாம் தூண்டப்படுவோம்? பெரும்பாலும் இடதுசாரிகளுடன் தான் இல்லையா... உதாரணத்துக்கு கட்டவிழ்ப்பு, கட்டுடைப்பு, மறுவாசிப்பு, மீள்வாசிப்பு, பிரதி போன்ற பதங்களைப் பிரயோகிப்பவர்களை 'பின்-நவீன லேபிள்களுடன் இருப்பவர்கள்' என்று நீங்கள் முன்பு ஒரு முறை அடையாளப் படுத்தியதைப் போல... :) ]

Anonymous said...

//'வேண்டும்'களை கட்டுரையின் மீது திணித்தல் பழைய விமர்சன முறை, வளர்ச்சியடையாதது.//
எனது வாசிப்போ அல்லது விமர்சனமோ 'பழைய' 'புதிய' என்கிற இரண்டு மோஸ்தர்களுக்குள் சிக்குற நான் அனுமதிப்பது இல்லை மயூரன். 'புதியது' என்பதற்காக ஒன்றைப் பின்பற்றுவதும், 'பழசு' என்று ஒன்றைக் கைவிடுவதும் என்னைப் பொறுத்தவரை trendyயாக இருக்க வேண்டும் என விருப்பப் படுகிற சனங்களின் பிரச்சனை. என்னுடைய theory நான் எதிர்கொள்கிற நாளாந்த சிக்கல்களில், பிரதிகளுக்குள் அவற்றை இடப்படுத்தலின் மூலம், பிரதிகளை எனக்குள் இடப்படுத்தி அலைக்கழிப்பதன் மூலம் உருவாகிற ஒன்று. அது எனதேயான, எனக்கேயான முறை. வேறு யாருடையதும், எந்த இயக்கம் சார்ந்ததும் இல்லை. இந்த முறையில் பிழைகள் இருந்தால் சொல்லுங்கள். பழசு/புதுசு லேபல் வேண்டாம்.
இந்தக் கட்டுரை ஒரு புனைபிரதியல்ல, அப்படியாயின் 'வேண்டும்'கள் வந்திருக்காது. இது ஒருவித சமூக அசைவை மிக வெளிப்படையாக கோருகிற (அதைச் செய்கிறேன் என்று claim வேறு பண்ணுகிற) ஒன்று. இப் பிரதி எவை எவையெல்லாவற்றையும் claimபண்ணியதோ, அவற்றில் சிலது இப்பிரதிக்குள் அடையப்படவில்லை. அவை பெறப்பட வேண்டுமாயின் இது இப்படியிருந்திருக்க வேண்டும், அது அப்படியிருந்திருக்க வேண்டும் என்று என்னுடைய அணுகுதலை இடையீடு செய்து பார்ப்பது. இதில் பிரதியாளருக்கு சிக்கல் எழ வாய்ப்பே இல்லை, அவர் எனது இடையீடுகளை மறுப்பதற்கான சுதந்திரத்துடன் தான் இருக்கிறார். ஆனால் என்ன, அவர் என்னை மறுப்பதற்கான காரணங்களுடன், ஆதாரங்களுடன் வரவேண்டும், எனது பிரதியை நீ விரும்பிய மாதிரி மாத்தி அமைக்காதே என்று புலம்பினால் நான் ஒன்றும் செய்ய முடியாது. (I mean, புலம்புவதை விடுத்து நான் மாத்தி அமைப்பதில் உள்ள சிக்கற்பாடுகளைச் சுட்டலாம், அந்த சிக்கற்பாடுகளை நான் பிறகு எதிர்கொள்ள, எனது எதிர்கொள்ளலை இன்னும் பிறர் இடையீடு செய்ய... இப்படியாக நடைபெறுவதற்குப் பெயர்தான் உரையாடல். ஒரு பிரதியை வைத்துக் கொண்டு, இதில் எதையும் எதிர்பாராதே, உன்னை/உனது தேர்வுகளை/அடையாளத்தை இதற்குள் இடப்படுத்தாதே என்று சொல்வது பிரதியை மிகப் புனிதமான இடத்திலே வைத்து அணுகும் வாசிப்பு முறை. இது எந்தக் காலத்துக்குரியது என்பதை நீங்களே அறிவீர்கள்.)

கள் said...

//சமப்பாலுறவு பற்றி முதலில் நீங்கள் சொல்லுகிற ஆதரவான prelude ஒட்ட மறுக்கிறது.
//

அந்தக் குறிப்பு கள் சஞ்சிகையால் இடப்பட்டது. கட்டுரையாளரால் அல்ல. கட்டுரையில் திருத்தங்கள் எதனையும் சஞ்சிகை செய்யவில்லை.

மு. மயூரன் said...

//இந்த முறையில் பிழைகள் இருந்தால் சொல்லுங்கள். பழசு/புதுசு லேபல் வேண்டாம்.//

நல்லது

நவீனம் பின்நவீனம் (பேரிலேயே பார் லேபிளை :-P ) லேபிள்களும் வேண்டாம் என்ன? (உரையாடலுக்கு சம்பந்தமற்றது எனினும்)

Anonymous said...

///இந்த முறையில் பிழைகள் இருந்தால் சொல்லுங்கள். பழசு/புதுசு லேபல் வேண்டாம்.//

நல்லது

நவீனம் பின்நவீனம் (பேரிலேயே பார் லேபிளை :-P ) லேபிள்களும் வேண்டாம் என்ன? (உரையாடலுக்கு சம்பந்தமற்றது எனினும்)/

மயூரனுடன் உரையாடப் போனால் கடைசியில் இப்படியான இடத்தில் தான் முட்டி மோதிக்கொண்டிருக்க வேண்டியிருக்கும்..

முடியல..

மு. மயூரன் said...

ஐயா/அம்மணீ பெயரில்லாதவரே,

//ஆக தந்திரதேவாவின் 'செயல்களை' *மட்டும்* விமர்சிப்பதன் மூலம் இடதுசாரிகளின் செயல்களையும் கண்டிக்க வேண்டியதொரு சங்கடமான நிலைக்கு ஆட்பட வேண்டி வரும்.//

கட்டுரையாளருக்கு எது சங்கடமாயிருக்கக்கூடும் என்டு மை எல்லாம் போட்டுப்பார்த்து விமர்சிக்க வ்ரும் ஆட்கள் எப்போது பார்த்தாலும் முட்டிமோதிக்கொண்டிருக்கும் இடம் ஒன்றேயாக இருக்க, வழியில்லாமல் நாமும் சாமிக்கதை சொல்ல வேண்டியதாகிற்று

Anonymous said...

//கட்டுரையாளருக்கு எது சங்கடமாயிருக்கக்கூடும் என்டு மை எல்லாம் போட்டுப்பார்த்து விமர்சிக்க வ்ரும் ஆட்கள்//
??????????????
what is the meaning of 'saami' kathai?
Do you think your talking path decided by others?
I think nobody cant change your 'nonless' view. ;-)

Anonymous said...

//what is the meaning of 'saami' kathai?//
mauran, watched Thasaavatharam Lately?? ;)
Hope you're back here (from Trinco)... so let's get the discussion back on the track enna.
there are few questions unanswered.
Nobody is trying to put a label on you... believe me. I said it for argument's sake!!
But keep in mind, you just can't escape what you've said. it's far worse than what we bash off all the time.
//மயூரனுடன் உரையாடப் போனால் கடைசியில் இப்படியான இடத்தில் தான் முட்டி மோதிக்கொண்டிருக்க வேண்டியிருக்கும்.. // Anony
I don't agree with this comment. I respect your ideological stances... I think you are someone who constantly tries to change the world with ideas/activism/whateverrrr, pls don't make me decide otherwise. (Others have already decided endaalum this is my first encounter.)
sorry for my inglish, no unicode here

Anonymous said...

//செத்தவன பற்றியெல்லாம் கண்டமாதிரி எழுதக்கூடாது கதைக்கிறவர்களுக்கு ஒன்றைச் சொல்லவேணும் உங்கட ஹிட்லர், முசோலினி, நாதுராம் கோட்சே, அமெரிக்காவின் ஜனாதிபதிகள், ஜே.ஆர் ஜயவர்த்தன இவர்களைப்பற்றியும் இவர்கள் செய்த கொடுஞ்செயல்கள் பற்றியெல்லாம் கதைக்கக்கூடாது. ஏனெனில்; அவர்கள் செத்து கனகாலமாயிற்று அதுக்காண்டி அவாகளின் செயல்களை விமர்சிக்காம இருக்க முடியாது.// Gud point.
விமர்சனமெண்டு வரும்போது 'செத்தவர்களை விமர்சிக்கலாமா' போல'முதியவர்களை விமர்சிக்கலாமா' இன்ன பிற கருத்துக்கள் கூறப்படுவதுண்டு.. ஜொர்ஜ் புஸ்-சும்தானே சாகப் போறார் :-)

இந்த பதிவைப் பொறுத்தவரை உறுத்துவது,
1. பாலின சிறுபான்மையினர் குறித்த (வெளிப்படையான, கட்டுரையாளரின்) சொல்லாடல்களே... -சமூகத்தின் சாக்கடைகளை விமர்சிக்கிறவர்களாகிய, சமூக ஒடுக்குமுறைகளை வெறுக்கிறவர்களாகிய - நாங்கள், சமூகத்தில் ஒடுக்கப்படுகிற (வசைகளாலும், கேலிகளாலும் அணுகப்படுகிற) வர்களை எழுதுகிறபோத 'அவதானமாக' இருக்க 'வேண்டும்'. எமது சொற்கள் சமூகத்தின் 'பெரும்பான்மைக'ளது போலவே, சிறுபான்மையை ஒடுக்குகின்றதா என்பதிலும் கவனம் 'வேண்டும்'!
இது கட்டுரையாளருக்கு 'ஓடர்' போடுவதாக அல்ல, சமூகம் சார்ந்த சமூகத்தில் ஒடுக்கப்படுகிறவர்கள் சார்ந்த, அக்கறையுடைய எவரும் செய்ய வேண்டிய ஒன்றாகவே இது இருக்க முடியும். நாம் சமூக மாற்றத்தை விரும்பிக் கொண்டு, அதுக்கு எதிராக செயற்படுவது முடியாதுதானே.. அது சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று தானே..
உ-மாக, எமது தகப்பன்களது தலைமுறையைப் பார்த்தால், இலங்கையின் பல்கலைக்கழக வட்டங்களில் 'பெரியவர்களாய் இருக்கிற' 'பாலின சிறுபான்மையினரிடம்' தமது மோசமான அனுபவத்தைக் கூறுவார்கள். அவர்களது அனுபவம் அத்தகைய ஆர்வமற்றவர்கள் என்கிற வகையில் 'அத்துமீறல்' என்கிறபோதும், அவர்கள் அவற்றை சொல்கிறபோது, எமது சமூகத்தில் 'கட்டுப்படுத்தப்பட்ட அத்தகைய பாலியலின் அரசியலைவிட' அத்தகைய அவர்கள் 'ஆண்களாய் இல்லாமல் இருக்கிற' கேலியே அதிகமாய் இருக்கும். அதாவது 'நோர்மலாய்' இல்லாமலிருத்தல். சகலவகை அதிகாரங்களையும் போல பெண்களையும் கட்டி ஆளுகிற அதிகாரமுள்ள ஆணாக இல்லாமலிருத்தல்! அந்த அனுபவங்களைப் பதிவு செய்கிறபோது அந்த அத்துமீறல்கள் குறித்து நாங்கள் இத்தகைய மொழியாடலை உபயோகிக்க முடியாதல்லவா ? ! ஏனெனில் -வாய்ப்புக் கிடைக்கிற போதெல்லாம் - சமூகம் அவர்களை கீழிறைத்துத்தான் வருகிறது. இயற்கையான உணர்வுகளை அனுபவிக்க முடியாதபடி, பாரபட்சங்கள் காட்டப்படுகிறபோதே, அவற்றை அடைவதுக்கான தந்திரங்களும் அத்துமீறல்களும் இடம்பெற முடியும். இங்கு சமூகத்தின் இத்தகைய பாரபட்சங்கள் மீதான விமர்சனம்தான் பெரியளவில் நடத்தப்பட 'வேண்டியது.'
அந்த வகையில், மேலேயும் பின்னூட்டங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறவற்றை நீங்கள் விளங்கிக் கொள்வீர்களென நம்புகிறேன்.

2. அப்புறம்: இந்தப் புகைப்படங்களின் உள்ளிடல் தொடர்பாய் curious. இவர்கள் எல்லோரும் 'கள்ள'ச் சாமிகள் என்கிற அடிப்படையிலா? அல்லது - சாய் பாபாவை வைத்துக் பாக்கிறபோது, -இவர்கள் எல்லோரும் - சிறுவர் மீதான பாலியல் peadophilic குற்றச்சாட்டுக்கள் உள்ளவர்கள் என்கிற அடிப்படையிலா ?
இந்த சாமியார்கள் எல்லாரப் பற்றியும் அந்த வரையறை சரியா தெரியவில்லை. ஒருக்கால்த் தெளிவுபடுத்துங்கள்.

Anonymous said...

Unbound Urchinக்குப் பதில்: //நவீனம் பின்நவீனம் (பேரிலேயே பார் லேபிளை :-P ) லேபிள்களும் வேண்டாம் என்ன? (உரையாடலுக்கு சம்பந்தமற்றது எனினும்)//

anonymousக்குப் பதில்//கட்டுரையாளருக்கு எது சங்கடமாயிருக்கக்கூடும் என்டு மை எல்லாம் போட்டுப்பார்த்து விமர்சிக்க வ்ரும் ஆட்கள் எப்போது பார்த்தாலும் முட்டிமோதிக்கொண்டிருக்கும் இடம் ஒன்றேயாக இருக்க, வழியில்லாமல் நாமும் சாமிக்கதை சொல்ல வேண்டியதாகிற்று//

ம், இந்த rap (பேட்ட ராப் இல்ல :-)
பாடகர்கள் மீதுதான் 'தங்கள் எதிரிகளை கற்பனை செய்து' பாடுகிற குற்றச்சாட்டு உண்டு (பின்நவீன மட்டுமில்ல, அதுக்கு முந்தைய எழுத்தாளர் பெருந்தகைகளும் ஒரு விமர்சனத்துக்கு விழுந்தடிச்சு அப்பிடித்தான் பில்டப் குடுக்கிறவை). பின்நவீனக்காரர்களை சொல்லப் போகிற நீங்கள் மட்டும் என்னவாம்.. அதால்தான் பீடிக்கப்பட்டிருக்கிறீர்கள்... கட்டுரையாளர் 'விமர்சிக்கிறவன் எனக்கு எது பிடிக்காதெண்டு மை போட்டு பாத்து வந்து குத்திறான்' என ஏன் சின்னப்பிள்ள போல insecure ஆகோணும்! ஏன் அப்பிடி அழோணும் :-)விமர்சனங்களுக்கு மட்டும் பதிலளிக்கலாமே மயூரன்? அது சிரமமா..? ஆரோக்கியமாக உரையாட வேண்டிய விசயங்களில் ஏன் 'எனது எதிரிகள் என்னை குத்திற நோக்கத்தோட வாறாங்கள்' எண்ட மாதிரி புலன்விசாரணைகள்? அப்படியிருந்தாற்தான் என்ன, உள்ளடக்கத்தை மட்டுமாய்ப் பேசுகிறபோது அவை அடிபட்டுப் போய் விடும் அல்லவா? அத்தோட
'கள்' என்கிற ஒரு கூட்டு சஞ்சிகையில் (அப்படித்தானே?) இத்தகைய தனிப்பட்ட rapபாடகர் syndomeமும் insecuritiesஉம் அதன் பயனுள்ள உரையாடல்களை குழப்பாதா என்ன?

மு. மயூரன் said...

//கட்டுரையாளர் 'விமர்சிக்கிறவன் எனக்கு எது பிடிக்காதெண்டு மை போட்டு பாத்து வந்து குத்திறான்' என//

நான் இப்படி எதுவும் சொல்லவில்லையே?

//என ஏன் சின்னப்பிள்ள போல insecure ஆகோணும்//

எங்கே அப்படி insecure ஆனேன் என்று சொல்ல முடியுமா?

//அப்பிடி அழோணும் :-)//

எங்கே அழுதேன்?

//'எனது எதிரிகள் என்னை குத்திற நோக்கத்தோட வாறாங்கள்' எண்ட மாதிரி புலன்விசாரணைகள்? //

இது முழுக்க முழுக்க உங்கள் சொற்களாலான உங்கள் கற்பனையே தவிர அப்படி எதனையும் நான் சொல்லியிருக்கவில்லை.

//rapபாடகர் syndomeமும் insecuritiesஉம் அதன் பயனுள்ள உரையாடல்களை குழப்பாதா என்ன?//

நீங்களே சில சொற்களை உருவாக்கி அதன்மூலம் ஒரு நிறுவல் செய்து, பிறகு அந்த நிறுவலின் அடிப்படையில் ஒரு சாராம்சத்தையும் எழுதியுள்ளீர்கள்.

இந்தச்சொற்சிலம்பாட்டம் பற்றி கொஞ்சம் சிந்திக்க வைத்ததற்கு மிக்க நன்றிகள்.

மு. மயூரன் said...

//அப்புறம்: இந்தப் புகைப்படங்களின் உள்ளிடல் தொடர்பாய் curious.//

புகைப்படங்கள் எவ்வாறு தெரிவுசெய்யப்பட்டன என்பது தொடர்பில் கள்ளும் கட்டுரையாளரும்தான் பதிலளிகவேண்டும் என்றபோதும்,

சிறிய ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை வினாக்கள் சிலவற்றைக் கேட்கலாம்.

1. இந்தப்படங்களில் உள்ளவர்களில் பொருத்தமில்லாதவர்களைத் தெரிவு செய்க ( odd man out)

2. இந்தப்படங்களில் உள்ளவர்களிடையேயான பொதுவான தொடர்பு என்ன?

3. இந்தப்படங்களில் உள்ளவர்களைப்பர்ர்த்த மாத்திரத்திலேயே இந்தக்கட்டுரை எதைப்பற்றியது என்று எண்ணத்தோன்றும்?

மு. மயூரன் said...

//mauran, watched Thasaavatharam Lately?? ;)//

ஆம். :-)

//But keep in mind, you just can't escape what you've said. it's far worse than what we bash off all the time. //

//pls don't make me decide otherwise. (Others have already decided endaalum this is my first encounter.)//

இவற்றின் ஆங்கிலம் எனக்கு புரியவில்லையா அல்லது சொல்லவந்தது புரியவில்லைய என்று புரியவில்லை.

தயவு செய்து, நேரமிருந்தால் ஒருமுறை விளங்கப்படுத்தவும்..

மு. மயூரன் said...

Unbound Urchin ,

கட்டுரை தொடர்பான உங்கள் விமர்சனங்கள் பலவற்றோடு நான் உடன்பாடு காண்கிறேன். அதுபற்றியும் முரண்படும் புள்ளிகள் தொடர்பாயும் கொஞ்சம் எழுத ஆசை. வேலிகள் அதிகமாயிருப்பதால், சில "மேலோட்டமான " விசயங்களுக்குமட்டும் இப்போது பதிலளித்திருக்கிறேன்.

Anonymous said...

/சில "மேலோட்டமான " விசயங்களுக்குமட்டும்/
apa alamana visayamum iruka?

Anonymous said...

நட்புடன் பொடியன்களுக்கும் பொடிச்சிகளுக்கும்…

ஆண்களும் …பெண்களும்…
எழுந்து …விறைத்து நிற்கும்….
ஆண்குறிகள் போல…
தூப்பாக்கியின் கூர் முனைகளை…
கைகளில் ஏந்தி…
பூமித் தாயின்…
யோனியை …
குத்திக் கிழித்து…
வல்லுறவு கொள்கின்றோமே….
ஓவ்வொரு கணமும்…
ஆன்றிலிருந்து ….இன்றுவரை…
இனிமேலும்…ஏதுவரை….

நுண்பர்களே!
ஆம் நாம் ஆண்களோ பெண்களோ…
ஏந்த வேறுபாடுமின்றி…
ஆணாதிக்கத்தின் அனைத்து அடக்குமுறைகளுக்கும் உட்பட்டு…
அது காண்பிக்கும் வன்முறைபாதையில் அல்லவா
தொடர்ந்தும் செல்கின்றோம்…

நண்பர்களே!

நுpச்சயமாக நாம் …
புhலியல் தூஸ்பிரயோகம் செய்பவர்களை…
புhலியல் வன்முறையில் வல்லுறவில் ஈடுபடுகின்றவர்களை…
ஆவர்களது முகத்திரையை கிழித்துக் காட்டவேண்டும்…
ஏந்த வித முரண்பாடும் இதில் இல்லை…

தங்களுடன் தொடர்புபட்ட சாமியாரை …
இந்தடிப்படையில் பார்த்து விமர்சித்திருப்பீர்ளோயானால்…
ஊங்களது பார்வை சரியானதாக இருந்திருக்குமு;.

மேலே ஒரு நண்பர் குறிப்பிட்டது போல் …
ஒருவரது பாலியல் உறவுக்கான தெரிவையும்…
பாலியல் தூஸ்பிரயோகம் மற்றும் வன்முறை வல்லுறவையும்…
ஒன்றாக சேர்த்துக் குழப்பியிருக்கின்றீர்கள்…
இவ்வாறு பாலியல் தொடர்பில் ஈடுபட்டவர்கள் என…
பலரை செவிவழியாக…கட்டுரைகள் வழியாக கேள்விப்பட்டிருக்கின்றோம்.
இதில் மார்க்ஸ் ஏங்கல்ஸ்…மாவோ…முதற்கொண்டு…
சேகுவேரா…பிடல் ஊடாக…
கிட்டு…வரை இந்தப் போக்கு தொடர்கின்றர்…
மறுபுறத்தில் சாமியார்களதும் குருமாரினதும் போக்குகள் தொடர்கின்றன…
இங்கு நாம் கவனிக்கவேண்டியது…
இவர்கள் தமது பதவியை அதிகாரத்தை தூஸ்பிரயோகம் செய்து…
இவ்வாறான பாலியல் உறவுகளில் ஈடுபட்டார்களா…?
புhலியல் வன்முறை வல்லுறவு மற்றும் தூஸ்பிரயோகங்களில் ஈடுபட்டார்களா என்பதே….

இதற்கு முதலில்…
இயேசு குறிப்பிட்டது போல் நம்மில் பாவம் செய்யாதவர்கள் யாரோ ….
ஆவர்களே கல் எறிவதற்கும் தகுதியானவர்கள்…
இதில் எழுதுகின்ற ஒவ்வொருவரும் தங்கள் மனசாட்சிகளுடன் கதையுங்கள்…
ஏங்களுக்குள் எழுகின்ற காம சக்தியின் உணர்வின் தாக்கத்தை எவ்வாறு உணர்கின்றோம்…
ஆதை எவ்வாறு கடந்து செல்கின்றோம்…
ஊளவியளார்கள் குறிப்பிடுவது போல்…
இச் சக்தியினால் உணர்வினால்…
நமது கனவுகளில கற்பனைகளில்….
நமது அம்மா அப்பா சகோதரர்களுடனும்…
அயலவர்களுடனும்…
நாம் விதியில் வெளியில் கண்டு கவரப்பட்ட மனிதர்களுடனும்…
உறவு கொண்டதில்லையா?
வுல்லுறவில் ஈடுபட்டதில்லையா?
புhலியல் தூஸ்பிரயோகம் செய்யவில்லையா?
ஆல்லது நீங்கள் குறிப்பிடும் ஒருபால் உறவில் ஈடுபடவில்லையா?
ஆகக்குறைந்தது சுய இன்பத்தில் ஈடுபடவில்லையா?

நும்மையறியாமல் கனவகளிலும் கற்பனைகளிலும்…
அவ்வாறு நிகழும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும்…
புயந்து நடுங்கி குற்ற உணர்வால் குனிக்குறுகி…
நும் இயற்கை உணர்வுகளை அடக்கவில்லையா?

இல்லை என்று நீங்கள் கூறினால் அது உங்களையே நீங்கள் ஏமாற்றுவதாகும்…
இல்லை இல்லை என தொடர்ந்தும் அடம்பிடிப்பீர்களானால்…
ஊடனடியாக வைத்தியரிடம் செல்லுங்கள்…
ஏனனில் நான் இன்றும் இந்த உணர்வுகளால் கஸ்டப்படுகின்றேன்…
இப்படி பலரது கஸ்டங்களை கேட்டு படித்து பார்த்து அறிந்திருக்கின்றேன்…

ஏன் இவ்வாறு நடைபெறுகின்றது…
நமது இயற்கை சக்தியான காம சக்தியை புரிந்து கொள்ளாது…
அதை சரியான பாதையில் வழி நடத்தாது…
சிறுவயதிலிருந்து அடக்கி அடக்கி வாழும் மனிதர்களின் நிலைமை இததான்…
இது மேலே…
ஒரு நண்பர் குறிப்பிட்டது போல் ….
ஒரு சமூகப் பிரச்சனை…
இதிலிருந்து …
சுhமியார்கள் குருமார்கள் மட்டுமல்ல…
நூம் மிகவும் மதிக்கும் புரட்சியாளர்களும்….
துத்துவஞானிகளும்…மட்டுமல்ல…
நமது முன்னோரும் பெற்றோறும்…
ஏன் நாமும் கூட ….
தப்பவே முடியவில்லை…
தப்ப முடியாது…

நீங்கள் ஒரு நாஸ்திகராக இருந்தால்…
ஒரு சாமியாரை உதாரணம் காட்டி…
அனைத்து சமாமியாருக்கும் ஒரு முத்திரை குத்தலாம்…
இதுபோல் எதிர் புரட்சியாளர்கள்…
ஒரு புரட்சியாளரை காரணம் காட்டி ….
ஆனைத்து புரட்சியாளர்களுக்கும் ஒரு முத்திரை குத்தலாம்.

மேலும் மேலே ஒரு நண்பர் குறிப்பிட்டது போல்…
இவ்வாறு சாமியார்கள் உருவாவதற்கு…
ஆதற்கான வெளி தேவை சமூகத்தில் இருக்கின்றது…
சுpல மனிதர்கள் தம் சுய தேவைகளுக்காக மனிதர்களின் இந்த தேவையைப் பயன்படுத்துகின்றனர்…

70 ஆண்டு கால சோவியத் யூனியனில் வாழ்ந்த மக்களுக்கு…
லெனின் தலைவரல்ல புரட்சியாளரல்ல…
ஒரு கடவுள்…
சோவியத்தின் உடைவுக்குப் பின்…
ஆவர்கள் மீண்டும் இயேசுவிடம் சென்றுவிட்டார்கள்…
ஏன்?
முனிதர்களின் நல் வாழ்க்கையலும் சமூக மாற்றத்திலும்…
ஊங்களுக்கு அக்கறை இருக்குமாயின் இந்த மாற்றம் ஏன் எப்படி நடைபெற்றது என ஆராயவேண்டியது கட்டாயமானதாகும்….
ஏனனில் மார்க்ஸியமும் இன்று மனிதர்கள் கேள்வியின்று நம்பும் ஒரு மதமாக அதன் கொள்கையாக மாறிவிட்டது…

ஆம் நீங்கள் குறிப்பிடுவது போன்று பாபா போன்ற போலிச் சாமியார்களுடன் எனக்கும் முரண்பாடு உண்டு….
மத நிறுவனங்களுடன் முரண்பாடு உண்டு…
ஏன் கடவுளுடன் (அவ்வாறு ஒருவர் இருந்தால்) கூட முரண்பாடு உண்டு…
நூன் முன்னால் ஒர் அரசியல் செயற்பாட்டாளர்…
எனது பார்வையில் புரட்சிகர அரசியலின் மீது நம்பிக்கையுமு; ஈடுபாடும் கொண்டிருந்தவர்…
ஆனால் ஓசோவை வாசித்த அடுத்த கணம் …
நமது செயற்பாடுகளின் முட்டாள் தனத்தை புரிந்து கொண்டு…
ஓசோ காட்டும் பாதையில் பயணிக்க ஆரம்பித்தவர்…
ஓசோ, பாபாவைப் போல் ஒன்றும் அதியங்கள் செய்பவரல்ல…
போலி நம்பிக்கைகளை வழங்குபவரல்ல…
ஏற்கனவே இருக்கும் மத நிறுவனங்களையோ…அதன் சடங்கு முறைகளையோ….
புpன்பற்றுபவரும் அல்ல…அவ் வழியில் செல்வதற்கு வழிகாட்டுபவரும் அல்ல…

ஓசோவின் ஒரோ குறிகோள்…
முனிதர்களிடம் பிரக்ஞையை வளர்ப்பதுதான்…
நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்பதல்ல முதல் முக்கியமானது….
சேய்யும் செயலில் பிரக்ஞையுன் முழுமையாக ஈடுபடுகின்றீர்களா என்பதே முக்கியமானது…

ஏனனில் மனிதர்கள் பிரக்ஞையின்றி இயந்திரமாக தமது பழங்காலங்களிலும் கனவுகளிலும் கற்பனைகளிலும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்;.
நூம் ஒருவரும் நிகழ் காலத்தில் இக் கணத்தில் பிரக்ஞையுடன் வாழவில்லை..

இதை வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது …
தங்களை கவனியுங்கள்…
தங்கள் மனதைக் கவனியுங்கள்…
ஏன்ன நடைபெறுகின்றது என்பதை புரிந்துகொள்வீர்கள்…
ஆம் நாம் பிளவுண்ட மனிதர்கள்…
மேலும் தொடர்வோம்…
மீராபாரதி
(ஆண்மையும் பெண்மையும்)
awakeningawareness.org

Anonymous said...

நீண்ட நாட்கழித்து பதில் எழுதநேரிடுகிறது மன்னிக்கவும்

எல்லாக்கருத்துக்களுக்கும் கருத்தாளர்களுக்கும் என் நன்றிகள் "நீங்கள் சொல்வதிலும் ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது" என்று சொல்லி தப்பிவிட நான் விரும்பவில்லை அதே நேரம் வீம்பு செய்யவும் நான் விரும்பவில்லை கருத்தாடல்களில் ஏற்கவேண்டியவற்றை ஏற்றுக்கொள்கிறேன் 'எல்லாவற்றையுமல்ல'

மீராபாரதியிடம் ஒரு கேள்வி
//ஓசோவின் ஒரோ குறிகோள்…
முனிதர்களிடம் பிரக்ஞையை வளர்ப்பதுதான்…//

என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள் உண்மையாகவும் இருக்கலாம் எல்லா மதங்களும் மத நிறுவனங்களும் மனிதர்களிடத்து பிரஞ்ஞையை உண்டு பண்ணுவதாகவே சொல்கின்றன இதில் முக்கியமானது 'பிரஞ்ஞை' எ;னறால் என்ன என்பதே ஓஷோ எந்த மனிதர்களக்கு பிரஞ்ஙையை உண்டுபண்ணினார் முன்பு நீங்கள் நேசித்த ஒடக்கப்பட்ட அல்லது தற்போது குறிப்பிடப்படும் விளிம்பு மக்களுக்கா அல்லது பணம் மெத்திப்போய் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்து பண்க்காரர்களுக்கா ஏனெனில் ஓஷோவிற்கு முன்பு சாகர்கள் பின்பு 'புத்தர்' போன்றவர்களும் மக்களுக்கு பிரஞ்ஞையை உண்டுபன்னியுள்ளார்கள் அவர்களுடைய கருத்துக்களின் சாரங்களின் தொகுப்பு ஓஷோவிடம் இருப்பதை ஓஷாவின் சில புத்தகங்களில் கண்டிருக்கிறேன்ஆனால் நான் முன்சொன்னவர்கள் ஆசிரம்களையும் சொத்தக்களையும் அமைக்கவில்லை பிரஞ்ஞையை பெற்றுக்கொள்ள பணத்தை ஒரு அளவுகோலக பயன்படுத்தவில்லை ஓஷோ அவ்வாறு பயன்படுத்தியாக கேள்வி இதற்கும் நீங்கள் பதில் சொல்லுங்களேன்

நட்படன்
எஸ்.சத்யன்