என் சாளரத்தைப் பிரித்துக்கொண்டு
இங்குமங்கும் தாவுகிறது
அந்தப் பூனை...
நோக்கமற்ற முயற்சிகளின் முடிவு
மீண்டும் தரையோடு...
விரல்களைக் கீறும்போது
ச்ச்சூ... சொல்லவில்லை நான்...
மீண்டும் மீண்டும் கீறிவிட்டு
என் முகம் பார்கிறது...
பின்
என் சுவாசக்கோளத்தைத் தட்டிக்கொண்டு
சுவருடன் முட்டி நிற்கிறது...
சில நிகழ்தல்களிற்கு
காரணங்களுமில்லை...
கற்பிதங்களுமில்லை...
விதைக்கப்பட்டவை அறுக்கப்படுகின்றன
சில வேளைகளில்
பதர்களுடன் கதிர்களும்...
--
பிரம்மியா கிருபநாயகம்,
மட்டக்களப்பு
இங்குமங்கும் தாவுகிறது
அந்தப் பூனை...
நோக்கமற்ற முயற்சிகளின் முடிவு
மீண்டும் தரையோடு...
விரல்களைக் கீறும்போது
ச்ச்சூ... சொல்லவில்லை நான்...
மீண்டும் மீண்டும் கீறிவிட்டு
என் முகம் பார்கிறது...
பின்
என் சுவாசக்கோளத்தைத் தட்டிக்கொண்டு
சுவருடன் முட்டி நிற்கிறது...
சில நிகழ்தல்களிற்கு
காரணங்களுமில்லை...
கற்பிதங்களுமில்லை...
விதைக்கப்பட்டவை அறுக்கப்படுகின்றன
சில வேளைகளில்
பதர்களுடன் கதிர்களும்...
--
பிரம்மியா கிருபநாயகம்,
மட்டக்களப்பு
7 comments:
நல்ல கவிதை. ஆகர்சியா போன்றவர்களின் கவிதைகளை நினைவு படுத்துகிறது..
தொடர்ந்தும் எழுதுங்கள்...
deepa madam புதிதாக எழுதுபவர்களை ஊக்கப்படுத்துங்கோ. தட்ற மாதிரி தட்டி காலை வாராக்கூடாது. underlying message in your comment is, there is no originality in this piece.
//there is no originality //
ha, c'mon. there's no such thing called ORIGINALITY/Cliche..
even without any intellectual prescribing this poet stands out... --------
if you're interested:
go and read some Barth and abt pastiche. a work (even if it's not an intended 'pastiche') may give you a pleasure in remembering/peeling off (theepa called it 'ninaivu paduththuthal)it's 'clichetic' layers. these layers might have complex cultural memories intertwining onraaka. I do not know whether i'm putting it correctly ;(
This might help you: Pastiche: Cultural Memory in Art, Film, Literature By Ingeborg Hoesterey http://books.google.lk/books?hl=en&id=hiAsrtQWqDkC&dq=Pastiche&printsec=frontcover&source=web&ots=ErjAtrSj2x&sig=_YXYKp0CXRsFJf_FJDuXORvbvHE&sa=X&oi=book_result&resnum=2&ct=result
eww..//theepa// shd read as 'deepa'
and sorry for the english, intha comp il thamiz illai
Nope.. Sutha sir.
எல்லோருடைய ஆரம்பக் கவிதைகளிலும் 'யாரோ'களின் சாயல் இருக்கத்தான் செய்கிறது. எழுத்தாளர்களில், சில 'பெரிய'வர்களின் (அதாவது கவிதை தொடர்ந்து பல காலம் எழுதுபர்வகளால், அவர்களது அனுபவத்தைச் சொல்கிறேன்) கவிதையில் பிற சாயல்கள் இருக்கின்றன.
இந்தக் கவிதை படிக்கிறபோது ஆகர்சியா உள்ளடக்கிய ஈழக் கவிதைகளின் தன்மையை உணர்ந்தேன். அந்தத் தன்மை தரமான எழுத்துக்களுக்கான படிகளே.. அதையே எழுதினேன்..
மற்றது: ஊக்கப்படுத்துவது என்பது என்ன? அதைத் தவிர ஒன்றை யாரும் செய்யவே கூடாதா ? !
அடிப்படையில் விமர்சனங்களே தேவையானவை. பெண்கள் 'ஒரே இடத்தில்' நிற்க வேண்டும் என்று தானே, தொடர்ந்தும் எழுத்தாளர்-ஆண்கள் ஊக்கப்'படுத்திக்'கொண்டே இருக்கிறார்கள் ? plz let them grow up.
டீபா
இல்லாத பிரதிக்கு விமர்சனங்கள் இல்லை. பிரம்மியா சில பிரதிகளைத் தரட்டும்...விமர்சனங்களை தொடர்ந்து வைக்கலாம். பிரம்மியா ஆடறுக்க முதல்...ரத்தத்துக்கு விலை பேசும் மனுஷியாக டீபா இருப்பதாக சாரளத்தைப் பிரித்துக்கொண்டு தாவும் மியா நினைக்கிறது. urchin tnks. (hereafter i'm miya)
//
பெண்கள் 'ஒரே இடத்தில்' நிற்க வேண்டும் என்று தானே, தொடர்ந்தும் எழுத்தாளர்-ஆண்கள் ஊக்கப்'படுத்திக்'கொண்டே இருக்கிறார்கள் ? plz let them grow up.
//
தீபா, இந்த வரி ஏன் இங்கே வந்தது. பதிவு வேறு கோணத்தில் திரும்பிவிடும் அபாயம் இருக்கிறது. இவற்றைப்பற்றி வேறு பதிவொன்று போட்டு கதைக்கலாமே.
________________________________
கவிதையின் நடை புதுக்கவிதை, வார்த்தைகளின் கையாள்கை நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் பிரம்மியா.
மதுவதனன் மௌ.
Post a Comment